ஆற்றில் இருந்து பிறந்து மூன்று நாள் மதிக்கத்தக்க சிசுவின் உடல் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து கல்முனை – சம்மாந்துறை பகுதியில் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிசுவும் மீட்கப்பட்டுள்ளது.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த குழந்தையை இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உயிரிழந்த சிசுவைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் நாளாந்த கூலித் தொழிலாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது திருமணம் செய்தவர் என்பதுடன் தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
#SrilankaNews
Leave a comment