தொடரும் பால்மா தட்டுப்பாடு!!

thumb 720 450 1495 f

நாட்டில் ஏற்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதிவரை நீடிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும் மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பால்மா இறக்குமதி செய்வதற்கு வங்கி நாணயக் கடிதம் திறப்பது தொடர்பாக குறித்த வங்கிகளிடம் விசாரிக்கும்போது, டொலர் இன்மையால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அதனால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணத்தட்டுப்பாடு அடுத்த மாதம் நடுப்பகுதி வரை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

Exit mobile version