பால்மா விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால்மாவிற்கான விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு கிலோ பால்மாவுக்கு 1,300 ரூபாவை விற்பனை விலையாகக் கோரும் இறக்குமதியாளர்கள், 400 கிராம் பால்மாவின் உச்சபட்ச விலையை 520 ரூபாவாகவும் விற்பனை விலைகளாக நிர்ணயித்து முன்மொழிவு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய பால்மாக்களின் உச்சபட்ச விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்கபால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.