மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பவன் ரத்னாயக்க, கமில் மிஷார, லஹிரு உதார ஆகியோரில் ஒருவருக்கு அல்லது இருவரும் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
மற்றும்படி பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், அணித்தலைவர் சரித் அசலங்க, ஜனித் லியனகே ஆகியோர் முதுமெலும்பாகக் காணப்படுவதோடு, வேகப்பந்துவீச்சுப் பக்கம் துஷ்மந்த சமீர, அசித பெர்ணாண்டோ களமிறங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் பாபர் அஸாமிடமிருந்து குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதோடு, ஹஸன் நவாஸின் இடத்தில் தொடர் பங்களிப்பை ஹுஸைன் தலாட்டிடமிருந்து அணி எதிர்பார்க்கும்.

