பாகிஸ்தான் தொழிற்சாலை வெடி விபத்து: கொதிகலன் வெடித்ததில் 16 தொழிலாளர்கள் பலி!

21113858ad4369b

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள ஒரு பசை தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம், பைசலாபாத், மாலிக்பூர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிற்சாலையில் இருந்த கொதிகலன் (Boiler) திடீரென வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version