சேதனப்பசளை உற்பத்திகள் யாழ். விவசாயிகளுக்கு அறிமுகம்

20211103 123126

இயற்கை வழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை உற்பத்திகள் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டன.

இன்று மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதனப்பசளை உற்பத்திகள், கூட்டெருக்கள்,
இலைக்கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில் யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் கொடித்துவக்கு, யாழ். மாவட்ட விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

#SriLankaNews
Exit mobile version