சாதாரண தரப் பரீட்சை – செயன்முறை பரீட்சை நீக்கம்!

3d6a4eccadeb87e833f3111f1bbe7a60 XL

சாதாரண தரப் பரீட்சை – செயன்முறை பரீட்சை நீக்கம்!

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளைத் தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை   இடம்பெற்று வருகிறது.
இந்தக் கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய 6 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளனர்.
எனவே, செயன்முறைப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தும் செயற்பாடானது, அடுத்துவரும் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் நிலைமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Exit mobile version