ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

New Project 51

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஒத்தாசை வழங்கியதாக றிசாட் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர், கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version