அரசின் கோட்டைக்குள் மாபெரும் போராட்டம்! – தயாராகிறது எதிர்க்கட்சி

7lkl7m9o sajith

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டமொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் அண்மையில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற மைதானத்திலேயே எதிரணியின் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.

அரசின் பரப்புரைக் கூட்டத்துக்கு பதிலடிக்கொடுக்கும் முகமாகவே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு, மின்சார நெருக்கடி, உரப் பிரச்சினை உட்பட மேலும் பல விடயங்களை முன்னிறுத்தியே போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version