ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது .

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் “தூய நகரம்” திட்டத்திற்கு அமைவாக இக் குளம் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும்,சிறப்பு விருந்தினர்களாக தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் நிலாஜினி தியாகேந்திரனும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஆரியகுளத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும்வகையில் மூன்று மொழிகளிலும் நினைவுக்கல் திறந்து வைக்கப்பட்டதுடன் ஆரியகுளம் பெயர் பொறிக்கப்பட்ட எழுத்துருவும் திறந்து வைக்கப்பட்டது.

ஆரியகுளத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை நிதியுதவி வழங்கிய தியாகி அறக்கொடை நிறுவனத்தின் பொறுப்பாளர் வாமதேவா தியாகேந்திரனுக்கு ‘அறக்கொடை அரசன்’ எனும் நாமம் சூட்டி மாநகர சபையால் மதிப்பளிக்கப்பட்டது.

நிகழ்வில் வான வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர். மாநகர சபை உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

20211202 175211   

#SriLankaNews

Exit mobile version