கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை முழுமையாக ஏற்றியவர்கள் (மூன்று அலகுகள்) மட்டுமே பொது இடங்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த நடைமுறையை மீறுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ பொது இடங்கள் ‘ தொடர்பான அறிவித்தல் பிரிதொரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது.
அதேவேளை , நாட்டில் பல பகுதிகளிலும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகின்றது. எனவே, இதுவரை அதனை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews