நீதித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த அலிசப்ரியால் மட்டுமே முடியுமே தவிர அரச இயந்திரத்தின் மூலம் அரச அமைச்சு மூலம் ஒருபோதும் திருத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று(09) நடைபெற்ற நீதித்துறை மீதான வரவு, செலவுதிட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மிருசுவில் படுகொலையின் குற்றவாளியாக இனங் காணப்பட்ட ஒருவரை ஜனாதிபதி தலையிட்டு அவரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்து அனுப்புகின்ற அளவுக்குத்தான் இந்த நாட்டின் நீதித்துறையின் மதிப்பு இருக்கிறது.
இலங்கையில் கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் குற்றமிழைத்த உங்கள் நண்பர்களையும் அல்லது உங்கள் இனத்தவர்களையும் விடுவிக்க மட்டுமே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுகிற மோசமான நிலைமை காணப்படுகிறது.
நீதித்துறை குறித்து இந்த சபை விவாதித்துக் கொண்டிருக்கின்ற, இந்த சமயத்திலே குற்றம் இழைத்த குறித்த இராஜாங்க அமைச்சர் திமிருடன் இந்த சபைக்கு வந்து நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அருகிலேயே உட்கார்ந்துமிருந்தது இந்த நாட்டின் நீதித்துறையின் நிலைமையை தெளிவாக காட்டுகிறது.
வடக்கு கிழக்கில் இருக்கும் நீதிமன்றுகளில் திட்டமிட்டப்பட்ட வகையில் சிங்களவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
பெரும்பாலான நீதிமன்ற, உத்தியோகத்தர்கள் சிங்களம் பேசுபவர்களாக இருப்பதால், நீதிமன்ற குறிப்புகளையும் தீர்ப்புகளை சிங்கள் மொழியிலும் எழுதுமாறு தமிழ் பேசும் நீதிபதி கேட்கபடுகிறார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுகின்ற செயற்பாடு. என்றார்.
#SrilankaNews
Leave a comment