நாட்டில் நாளைய தினம் ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது.
இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும் மாலை வேளையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளைய நாளில் மொத்தமாக 7 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews