காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு!

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

ஓகஸ்ட் மாத சம்பளம் கொரோனா நிதியத்துக்கு!

காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், பதிவாளர் நாயகத்தால் வழங்கப்படும் ‘காணாக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழை வைத்துள்ள காணாமல்போனவரின் நெருங்கிய உறவினருக்கு, ஒருமுறை மாத்திரம் மேற்படி கொடுப்பனவு வழங்கப்படும்.

காணாமல்போனவரின் குடும்ப உறுப்பினர்களின் மீள வாழ்வுக்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இதற்கான யோசனை நீதி அமைச்சர் அலி சப்ரியால் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version