நீராடச்சென்ற இடத்தில் ஒருவர் பலி – இருவரை காணவில்லை!!

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இத்துயர் சம்பவம் நேற்று(06) மதியம் இடம்பெற்றுள்ளது.

கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு ஐவர் சென்றுள்ளனர். இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ஐவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் இருந்தவர்களால் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன். அவர்கள் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 19 வயது தாயும், அவரின் மகளுமே  காணாமல்போயுள்ளனர்.

அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.  சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

WhatsApp Image 2021 12 06 at 12.35.53 PM

#SrilankaNews

Exit mobile version