ஹட்டன் வாகனவிபத்தில் ஒருவர் பலி!!!

WhatsApp Image 2021 11 25 at 11.06.50

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24 நேற்றிரவு 7 மணியளவில் பெரிய மணிக்வத்தை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதியை சேர்ந்த சுந்தராஜ் (வயது – 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.படுங்காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

#SriLankaNews

Exit mobile version