மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கொக்ட்டிசோலையில் இருந்து வவுணதீவு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், வவுணதீவு தாண்டியடியில் இருந்து கொக்கட்டிச்சோலை நோக்கி சென்ற வேனும் வாழைக்காடு சந்தியில் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தவர் உயிரிழந்துள்ளார்.
58 வயதுடைய கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மைலப்போடி சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews