‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – செயலணிக்கு தமிழர்கள் மூவர் இணைப்பு

Galagoda Aththe Gnanasara Thero

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு தமிழர்கள் மூவர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராசா ஆகியோர் குறித்த செயலணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஞானசார தேரர் தலைமையில் மேற்படி செலணிக்கு அண்மையில் 11 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் தமிழர்கள் எவரும் உள்ளக்கடப்படவில்லை. இதற்கு எடும் எதிர்ப்புகள் வலுத்தன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மூன்று தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version