‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான குறித்த செயலணியில் 13 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது.
13 பேர் கொண்ட செயலணியில் ஒரு தமிழர்கூட உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews