இந்தியாவை கடுமையாக தாக்கும் ஒமிக்ரொன்!

omicron

ஒமிக்ரொன் இந்தியாவை கடுமையாக தாக்கியுள்ளதென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்று புதிய ஒமிக்ரொன் தெற்றாளர்கள் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சண்டிகார், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஸ்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர பிரதேஸ் மற்றும் சண்டிகார் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரொன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டெல்லி, ராஜஸ்தான், மஹாராஸ்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒமிக்ரொன் தெற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரையில் 38 ஒமிக்ரொன் தெற்றாளர்கள்உள்ளனர் என இந்திய சுகாதார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் ஒமிக்ரொன் தெற்று இந்தியாவில் அதிகரிக்கலாம் எனவும் மக்களை கடும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

#india

Exit mobile version