லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக ஒமைக்ரோன் தொற்று உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
குறித்த தொற்று தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாவ் பாவ்லோவுக்கு தனது மனைவியுடன் வந்த நபரொருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணவர், மனைவி இருவருக்குமே ஒமைக்ரான் வகை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்துக்குள் ஒமைக்ரோன் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. ஒமைக்ரோன் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Worldnews
Leave a comment