பல நாடுகளை தாக்கியுள்ள ஒமிக்ரொன் – மீண்டும் எச்சரிக்கும் WHO
ஒமிக்ரொனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல நாடுகள் பாதிக்கும் என WHO எச்சரித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் திரிவு ஆனா ஒமிக்ரொன் சுமார் 23 நாடுகளில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரொன் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் தாக்கும் திறன் கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில்ஊடகவியலாளர்களுக்கு ஜெனிவாவில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ்,
தென் ஆப்பிரிக்காவில் ஜெனிவாவில் கொரோனா வைரஸின் திரிவான ஒமிக்ரொன் வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
முதலில் 4 அல்லது 5 நாடுகளில் காணப்பட்ட ஒமிக்ரொன் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு விரைவாக பரவுமெனவும் எச்சரித்துள்ளார்.
ஒமிக்ரொனின் இந்த தாக்கத்தை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒமிக்ரொன் கண்டுபிடிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, அமெரி்க்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்மை குறிப்பிடத்தக்கது.
#WORLD
Leave a comment