248749 scaled
செய்திகள்இந்தியா

இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!!

Share

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை கர்நாடகாவில் 2, மகாராஷ்டிராவில் 8, குஜராத் மற்றும் டெல்லியில் தலா 1 என 12 பேருக்கு ஒமிக்ரோன்தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தென் ஆபிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பியபிறகு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாகவுர் மாவட்டம் ரோஷிசா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல நாடுகளை ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள பட்டியலில் சேர்த்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...