இலங்கையில் ஒமிக்ரொன் திரிபுடன் மேலும் 41 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.
உலகின் பல நாடுகளுக்குள் தலைதூக்கியுள்ள கோவிட்டின் திரிபான ஒமிக்ரொன் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே முதலில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டார்.
குறித்த மாறுபாடு தொடர்பாக தேவையான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் எடுத்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews