272251828 10228454891660526 8087965484143469982 n
செய்திகள்உலகம்

ஒமெக்ரோனின் “சகோதர வைரஸ்” – உலகம் விழிப்புடன்!

Share

கடந்த இரு தினங்களாக ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இத் தகவல் வெளியாகி வருகிறது.”பதற்றப்பட ஒன்றும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்” என்கின்றனர் நிபுணர்கள்.

ஒமெக்ரோனில் இருந்து சிறிது மாறுபட்ட அதன் “சகோதர வைரஸ் திரிபு “(“little brother variant of Omicron”) ஒன்றை உலக அறிவியலாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தென் ஆபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட திரிபுக்கு ஒமெக்ரோன் என்று பெயரிடப்பட்டது. அதன் மூலக்கூறுகள் BA1 என்ற அறிவியல் குறியீட்டில் அழைக்கப்பட்டது. இதுவரை உலகெங்கும் பரவிய ஒமெக்ரோன் திரிபு அதுவே ஆகும்.

இப்போது அதிலிருந்து தோன்றிய பிறழ்வு ஒன்று (sub-variant) டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. முந்தியதைப் போன்றே இதுவும் தொற்றாளர்களில் “மிக லேசான” பாதிப்புகளையேஉண்டாக்குவது தெரியவந்துள்ளது. எனினும் “ஸ்பைக் புரதம்” என்கின்ற அதன் புரத மரபு மூலக்கூற்று வடிவம் (Spike glycoprotein) தங்களுக்குக் “குழப்பங்களை” ஏற்படுத்தியிருப்பதாகச் சில
நாடுகளின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BA.2 எனப்படுகின்ற அந்த இரண்டாவது திரிபை சில அறிவியலாளர்கள் “கள்ளத்தனமானது” (stealth Omicron) என்று அழைக்கின்றனர்அதற்குக் காரணம் என்ன?

உலகெங்கும் வைரஸ் தொற்றுக்களை உறுதி செய்யவும் தொற்றாளர் எண்ணிக்கையைக் கணக்கிடவும் பி.சி.ஆர்.(PCR) என்ற பரிசோதனை முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒமெக்ரோனின் இந்த இரண்டாவது வகைத் திரிபை பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறிய முடியாதிருக்கும் என்று அறிவியலாளர்
கள் நம்புகின்றனர்.

பொதுவாக கொரோனோ வைரஸ் வகைகளின் அடிப்படைப் புரதக் கட்டமைப்புகளே அவை மனித உடலில் தொற்றுவதற்கும் தடுப்பூசி மூலம் அதனை எதிர்ப்பதற்கும் பிசிஆர் போன்ற பரிசோதனைகளில் அதனைக் கண்டறிவதற்கும் உதவுகின்றன. “ஸ்பைக் புரதம்” (Spike glycoprotein) என்கின்ற மரபுக் கட்டமைப்புகளை ஒமெக்ரோனின் புதிய திரிபில் கண்டறிய முடியாதிருப்பதாகக் (S-gene dropout) கூறப்படுகிறது.

இவ்வாறான அதன் “கள்ளத்தனம்” பரிசோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கேள்விக்குள்ளாக்கி
விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மிகத் தீவிர பரவல் தன்மை அவதானிக்கப்பட்டிருப்பினும் இந்தப் புதிய பிறழ்வு தொற்று நோயின் போக்கில் பெரிய மாற்றத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தும் என்பதை உடனடியாகச் சொல்லிவிட முடியாது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் டென்மார்க்கிலேயே இந்தத் திரிபுத் தொற்று அதிக எண்ணிக்கையில் அவதானிக்கப்பட்டி
ருக்கிறது. அதற்கு அந்த நாட்டிடம் உள்ள வைரஸ் மரபு வடிவங்களைப் பரிசோதித்துக் கண்டறிகின்ற போதிய வசதிகளும் ஒரு காரணமாகும்.

பிரான்ஸின் பிரதமர் ஜீன் காஸ்ரோ கடந்த வியாழனன்று கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் ஒமெக்ரோனின் புதிய”சகோ ரத் திரிபு” பரவுவது பற்றிய தகவலையும் சாடமாடையாகக் கோடிகாட்டியிருந்தார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...