ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதம் – 91 பேர் உடல் கருகிச் சாவு

fuel tanker blast

Oil blast in Africa

ஆப்ரிக்காவில் வெடித்த எண்ணெய் குதத்தல் 91 பேர் உடல் கருகி சாவடைந்துள்ளனர்.

ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன் நாட்டின் ப்ரீடவுன் நகரத்தில் உள்ள எண்ணெய் குதத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி சாவடைந்ததாக அந்நாட்டுச் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் இச்செய்தி தொடர்பில் தெரியவருவது,

எண்ணெய் குதத்தில் பரவூர்தி ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் குதம் அருகே நடந்த இந்த விபத்தினால் தீப்பிடித்து அங்குள்ள பெற்றோல் சேமிப்பு கிடங்கு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை தமது அரசு அனைத்தையும் செய்யும் என கூறியுள்ளார்.

#WORLD

Exit mobile version