சேவையிலிருந்து விலகிய பொலிஸ் பொறுப்பதிகாரி!!

police edited

பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் குற்றப் புலனாய்வு பகுப்பாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சேவையில் இருந்து விலகியுள்ளார்.

பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் குற்றப் புலனாய்வு பகுப்பாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளார்.

இதனையடுத்தே அவர் சேவையில் இருந்து விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த அதிகாரி விடுமுறை அனுமதி எதும் பெறாமல் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் குறித்த அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால், கடமைக்கு சமுகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version