தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

24 66019a5fc3fb3

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

தமிழக சட்டசபை தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது சத்தியம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி வேட்பு மனுதாக்கல் நிறைவடைய உள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் வேட்பாளராக கார்த்திகா போட்டியிடுகிறார்.

கோவை சேர்ந்த பி.ஈ பட்டதாரியான இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை தேர்தல் பரப்புரையாளராக உள்ளார்.

இவர் இன்று நாகப்பட்டினம் மக்களவை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த்துள்ளார்.

அப்போது, ”தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது ஆணையாக எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version