தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக எந்தவொரு இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (நவம்பர் 18) சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்கள், “எங்கள் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?” என அடைக்கலநாதனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அடைக்கலநாதனின் பதில்: “இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது. ஆனால் புதிய இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை,” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

