தொழிற்சங்கங்களுக்கு அடிபணியபோவதில்லை! – ரம்புக்வெல்ல

hehaliya

தொழிற்சங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

” முடியுமான விடயங்களை மட்டுமே என்னால் முடியும் எனக் கூறமுடியும். ‘பரீசிலித்து பார்க்கின்றேன்’ என நான் கூறுவதில்லை. எனவே, அந்த எல்லைக்குள் இருந்துதான் சுகாதார அமைச்சராக நான் செயற்படுவேன்.

நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறைமீது மக்களுக்கு இருந்த மதிப்பு குறைந்துவருகின்றது. எனவே, போராடுபவர்கள் இது பற்றியும் சிந்திக்க வேண்டும்.” – என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version