அமெரிக்காவின் அழைப்பினைப் புறக்கணித்த வடகொரியா! – மீண்டும் ஏவுகணை பரிசோதனை

00nkorea gameplan 01 jumbo

வடகொரியா, கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை இன்று சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சர்வதசேத்தின் கண்டனங்களை கண்டுகொள்ளாத வட கொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடாத்திவரும் நிலையில், இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது முறையாக ஏவுகணை சோதனையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினைப் புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றி வருகின்றது.

கடந்த 5ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 14ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையையும் நடத்தியதாக வடகொரியா அறிவித்தது.

கிழக்கு கடற்கரையிலுள்ள ஹம்ஹங் வழியாக, தனது அண்டை நாடான வடகொரியா, இரண்டு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

#WorldNews

Exit mobile version