இன-மத பேதமில்லை : மக்களின் ஒற்றுமையே தேவை!!- இரா. சாணக்கியன்

கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்  அதிகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது எனவே, தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடி போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.

இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.

நான் யாருடைய வாக்குகளுக்காகவும் செயற்படவில்லை. மக்களின் ஒற்றுமையே அவசியம். அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2021 11 25 at 15.18.49

#SriLankaNews

 

Exit mobile version