இனிமேல் வழங்கப்படும் வீட்டு உறுதிகள் குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டதலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிர் அணியின் இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பொறுப்பேற்றுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும்.
கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக ஆட்சிதான். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி என்றார்.
#WorldNews