இனி எரிவாயுவிற்கு தட்டுபாடு இல்லை!

1537957420 Price of Litro Gas increased from midnight B 1 1

சமையல் எரிவாயு கிடைப்பதில் இனி வரும் காலங்களில் எவ்வித தட்டுபாடும் இல்லையென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடும்போது,  சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்கும்.

இன்னும் 05 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும்.

அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும் எனவே சமையல் எரிவாயு கிடைப்பதில் எவ்வித குறைப்பாடும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version