இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் போது, எந்தவொரு தரத்திலும் (Grades) புதிய இணைய இணைப்புகளை (Web Links) சேர்ப்பதை முற்றிலுமாக நிறுத்தத் தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (09) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர், தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) கல்வி விவகார சபை மூலம் இந்தத் தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள வலைத்தளங்கள் மற்றும் கல்விசார் ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்க வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்முதல் (Procurement) தொடர்பான சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
பாடப்புத்தகங்களில் வழங்கப்படும் சில இணைய இணைப்புகளை அணுகுவதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் டிஜிட்டல் சமத்துவமின்மை குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்கள் சுயமாக முழுமைபெற்ற நிலையில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன.