நாடு முடங்காது! – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Hemantha Herath 700x375 1

“நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கக்கூடிய வளம் உள்ளது. பழைய நடைமுறை பின்பற்றப்படும். அத்துடன், வைத்தியசாலைகளில் போதுமானளவு ‘ஓட்சீசன்’ உள்ளது. எனவே, வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சீசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள போலியானவை.

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.” -என்றார்.

#SriLankaNews

Exit mobile version