இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் விவாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் 56, முல்லைத்தீவில் 1,394 வவுனியாவில் 997, கிளிநொச்சியில் 1858 அநுராபுரத்தில் 7100, பொலன்னறுவையில் 2,772, மொனராகலையில் 2,812 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
பதுளையில் 350 அம்பாந்தோட்டையில் 473 காலியில் 87 மாத்தறையில் 116 அம்பாறையில் 5077 மட்டக்களப்பில் 269 திருகோணமலையில் 4193 கொழும்பில் 825 கம்பஹாவில் 518 களுத்துறையில் 423 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று, கண்டியில் 703 மாத்தளையில் 114, குருநாகலில் 245 புத்தளத்தில் 638 இரத்தினபுரியில் 293 கேகாலையில் 109 அதிகாரிகளுமாக மொத்தமாக 31,422 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் இல்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது சுட்டிக்காட்டினார்.

