பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்தி!

University Grants Commission UGC Sri Lanka

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏற்பட்ட கொரொனா பாதிப்பால் பல்கலைகழக செயற்பாடுகள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது ஓரளவு நாடு வழமைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலையில் 2020ம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்ட நிலையில் அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும் ,இதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version