பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாலையோரத்தில் மறையான இடத்தில் சூட்கேஸ் பெட்டியினுள் திணிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தங்களால் நம்ப முடியவில்லை.அவர் மிகவும் எளிமையான, இரக்க குணம் கொண்டவர். உதவி கேட்டு யார் அவரை நாடினாலும் உதவும் குணம் கொண்டவர் என அவரது நெருங்கிய தோழிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த கொலை தொடர்பில் உள்ள மர்மங்களை அவிழ்ந்த பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
#WorldNews
Leave a comment