எரிவாயு சிலிண்டரை அடையாளம் காண புதியமுறை!

image 0d2fd8c395

 சந்தையில் விநியோகிக்கப்படும்  எரிவாயு சிலிண்டர்களை அடையாளம் காண புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை, எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அகற்றப்படும் பொலித்தீன் அட்டையின் நிறம் மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு சிலிண்டரில் உள்ள பொலித்தீன் உறை வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிற இலச்சினை கொண்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களில் உள்ள பொலித்தீன் உறை மஞ்சள் நிறப் பின்னணியில் நீல நிற இலச்சினையாக மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version