இலங்கையின் முதல் அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் பணிகள் நிறைவு செய்து நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய களனி பாலத்தின் பூர்த்திப் பணிகளை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்றத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை மீரிகம தொடக்கம் குருநாகல் வரை பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு திறக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews