சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவர்களுடன் மேலதிக வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2022ஆம் ஆண்டில், நாட்டில் முடக்க நிலையை அமுலாக்காமல் இருப்பதற்கும், வழமைபோல இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும், அனைத்துப் பிரஜைகளும் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
#Srilankanews