புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் குறித்த வழிகாட்டல் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய சுகாதார வழிகாட்டல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews