ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறினாலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையாது – என்று சு.கவின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வேகம் காட்டவில்லை. அவ்வாறு வெளியேறினால்கூட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையமாட்டோம்.
எம்முடன் பல கட்சிகள் பேச்சு நடத்தி வருகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலேயே அடுத்த அரசு அமையும் என்பதை தெளிவாகக் குறிப்பிட முடியும்.
குமார் வெல்கம என்பவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் கிடையாது.” – என்றார்.
#SriLankaNews