புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தினப் பேரணி!

20230501 162633

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தினப் பேரணி!

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
நேற்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி
வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவுற்று பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
ரணில் அரசாங்கத்தில் விலைவாசிகள், உழைக்கும் மக்களை அரசாங்கம் சுரண்டுகிறது, விவசாயத்தினை கூண்டோடு அழிக்கிறது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாக்சிச லெனினிசக் கட்சியில் செயலாளர் சி.க.செந்தில்வேல், உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன், சட்டத்தரணி த.தேவராஜ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள்பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
#srilankaNews
Exit mobile version