இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி புதிய தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பதவியை இன்று பொறுப்பேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தவர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews