பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பேருந்துகளை ஈடுபடுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நாடு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஓரளவு சுமூகமான நிலைக்கு திரும்பிய நிலையில் பாடசாலைகள் மீளதிற்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசு சரிய பேருந்துகளை ஈடுபடுத்த டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் பல பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews