கொக்குவில் இந்துக் கல்லூரியில் புதிய கட்டிடம் திறப்பு

20220130 083104

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி பாடசாலை கட்டிடம் இன்றைய தினம் நீதியமைச்சர் மொகமட் அலி சப்ரியினால் திறந்துவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்த கட்டிடம் இன்று காலை 8.30 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், நீதியமைச்சின் செயலாளர் மாயதுன்னை,வடமாகாண பிரதம செயலாளர்,வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

#SriLankaNews

Exit mobile version