முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடியபோது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி ஒன்று ஆரம்பிக்கப்படலாம் என்று சுதந்திரக் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயினும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியோ, அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ, இது தொடர்பாகக் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனாலேயே தற்போது நாட்டில் சீனியின் விலை அதிகரித்துள்ளது என சதொச நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.