images 1 5
செய்திகள்உலகம்

போர் நிறுத்தம் பின்னணியிலும் நெருக்கடி: கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் நெதன்யாகுவை கைது செய்ய தயார்!

Share

இஸ்ரேல் – காசா போரில் அமெரிக்காவின் தலையீட்டால் தற்போது அமைதி ஒப்பந்தம் (போர் நிறுத்தம்) ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கால் வைத்தால் கைது செய்யப்படுவார் எனப் பல நாடுகள் அறிவித்துள்ளது இஸ்ரேலுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவைத் தாக்கத் தொடங்கிய இஸ்ரேல், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்தது. இது இனப்படுகொலை எனப் பல நாடுகளும் கண்டித்தன. இதன் விளைவாக, நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்குப் பிடியாணை (Arrest Warrant) பிறப்பிக்கப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் நடைமுறையாகியுள்ள நிலையிலும், நெதன்யாகு மீதான பிடியாணை நடைமுறையில் உள்ளது.

இதனால், பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்கனவே எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பெஞ்சமின் நெதன்யாகு மீதான சர்வதேச பிடியாணையைச் செயல்படுத்துவோம் எனக் கூறியுள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடக்கில் மக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி அதிரடி உத்தரவு: 2025-இல் 1000 ஏக்கர் விடுவிப்பு!

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் தனியார் காணிகளை முறையாக விடுவிப்பதற்கும், மூடப்பட்டுள்ள வீதிகளை...

world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...